தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்



தமிழ்ச் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை _ தமிழர் வாழ்வில் கதைகள் சொல்லிச் சிறு குழந்தைகளின் கற்பனைத் திறனை
           வளர்த்தல் மரபு.
-    வளமான சிறுகதை படைப்புகள் பேச்சு வழக்கில் தோன்றினாலும் ஆரம்பத்தில்
அவை பெரிய எழுத்து வடிவில் மக்களிடம் சேர்ப்பிக்கப் பட்டன.
-    உதாரணம் – அல்லி அரசாணி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யு, நல்ல தங்காள் கதை போன்றவை சிறுவர்களிடையே மிகப் பிரபலம்.
கருத்து
-    19 – ஆம் நூற்றாண்டில் தமிழில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின், முதல் சிறுகதை நூல் பரமார்த்த குரு கதை ( வீரமா முனிவர் )
-    இதனைத் தொடர்ந்து கதாமஞ்சரி, ஈசாப்பின் நீதிக்கதைகள், மதனகாமராஜன் கதை, முப்பத்திரண்டு பதுமை கதை, விவேக சாகரம், மயில் இராவணன் கதை போன்றவை வெளியாயின.
-    தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கிய செவிவழிக் கதைகள்; தக்காணத்துப் பூர்வக் கதைகள், திராவிடப் பூர்வக் கதைகள், திராவிட மத்தியக் காலக் கதைகள் என தொக்குக்கப்பட்டன. ( பண்டிதர் நடேச சாஸ்திரி )
-    அடுத்து, தெனாலி ராமன் கதைகளும், மரியாதை ராமன் கதைகளும் தமிழில் பிரபலமாயின
-    இராமசாமி செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி எனும் நூல், 1876-ல் கம்பர், ஒட்டக்கூத்தர், கவி காளமேகம் ஏகம்பவாணன் , அவ்வையார் போன்றோரின் வரலாற்றுக் கதைகளாய் அமைந்தன.

இவையே சிறுகதைகளை அச்சு வடிவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நூற்றாண்டுகால முயற்சியாகும்.

சிறுகதை – முதல் கால கட்டம் ( 1900 – 1925 )

அ )  அ. மாதவையா
-    ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றவர்
-    மேலைநாடு மரபை ஒட்டிய சிறுகதைகளை 1910-ஆம் ஆண்டில் இந்து ஆங்கில நாளிதழில் 27 தொடர்களாக எழுதினார்.
-    பின்னர் இக்கதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தன.
-    இக்கதைகள் சமூகச் சீர்திருத்த நோக்கத்தில் எழுதப்பட்டவை.
குழந்தைப் பருவத் திருமணம், கைம்பெண் கொடுமை, வரதட்சணைக் கொடுமை போன்றவை இச்சிறுகதைகளின் சாரம்.

ஆ ) சுப்ரமணியப் பாரதி
-    பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
-    நவதந்திரக் கதைகள், வேணுமுதலி சரித்திரம், மன்மத ராணி, பூலோக ரம்பை, ஆவணி அவிட்டம் போன்றவை பாரதியின் சிறுகதைகளில் முக்கியமானவை.
-    ஆயினும் பாரதியின் கதைகள் சம்பவங்களை விளக்குகின்றனவே தவிர, சிறுகதைக்குரிய உணர்ச்சி இல்லை.

இ ) உ.வே சுவாமிநாத ஐயர்
-    1912-ஆம் ஆண்டில் ஐந்து கதைகள் அடங்கிய தொகுதியை வெளியிட்டார்.
-    அவற்றில் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையே தமிழின் முதல் சிறுகதைக்குரிய அம்சங்களோடு விளங்கியது.
-    காரணம் கதையில் கதாபாத்திர ஒருமை, நிகழ்ச்சி ஒருமை, உணர்வு ஒருமை போன்றவை அமையப்பெற்றிருந்தன.
-    வரதட்சணைக் கொடுமை இக்கதையின் கருப்பொருளாகும்.
-    இக்கதையினை ஓர் அரசமரம் கூறிச்செல்வது போல் அமைந்தது இதன் சிறப்பாகும்.

இவர்களே தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி எனப் போற்றப் படுகின்றனர்.
இரண்டாம் காலகட்டம் ( 1926 – 1945 )
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சிறப்பானக் காலக்கட்டம்

அ )  கல்கி கிருஷ்ணமூர்த்தி
-    நவசக்தி, விமோசனம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வார, மாத இதழ்களில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார்.
-    அவரின் சிறுகதைகள் ; அதிர்ஷ்ட சக்கரம், கவர்னர் விஜயம், கோர சம்பவம், சாரதையின் தந்திரம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
-    கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, உப்புச் சத்தியாகிரகம், புலால் தவிர்த்தல், விதவை மணம்,  பால்ய விவாக ஒழிப்பு போன்றவை இவருடைய கதைகளின் கருப்பொருளாகும்.
-    மொழிநடை – நகைச்சுவை பாணி

இவருடைய வரலாற்று நாவல்கள் புகழ்பெற்ற அளவுக்கு இவரின் சிறுகதைகள் புகழ்பெறவில்லை.

ஆ ) புதுமைப் பித்தன்
-    தமிழ்ச் சிறுகதைகளை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்றவர்
-    மேல்நாட்டுச் சிறுகதைகளின் அடிப்படையில் சொந்த மொழிநடையில் சிறுகதைகளைப் படைத்தவர்.
-    இவர் கேலிக்கதைகள், புராணக் கதைகள், தத்துவக் கதைகள், நடப்பியல் கதைகள் எனப் பல்வேறு சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
-    பொய்க்குதிரை’, ஒருநாள் கழிந்தது, பொன்னகரம், துன்பக்கேணி போன்றவை மக்களின் வறுமை நிலையை விளக்கும் கதைகளாகும்.
-    புராணக் கதை மரபு கொண்டது;- சாப விமோசனம்,அகல்யை அன்றிரவு
-    தத்துவ மரபுக் கதை :- கயிற்றரவு, மகாமசானம், ஞானக்குகை
-    வேடிக்கை வினோதக் கதை :- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,
-    நாட்டுப்புறக் கதை :- சங்குத் தேவனின் தர்மம், வேதாளம் சொன்னக் கதை

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் பின் வந்த படைப்பாளிகளுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கியவர். இவரின் சிறுகதைகள் சாகாவரம் பெற்றவை.

இ ) ந. பிச்சமூர்த்தி
-    இவரின் சிறுகதை வடிவம் வித்தியாசமானது
-    மனித மன ஆழத்தைத் தம் சிறுகதையில் படம் பிடித்துக் காட்டியவர்.
-    இவரின் புகழ்பெற்ற சிறுகதைகள்:- பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி,மண்ணாசை, விழிப்பு, பஞ்சகல்யாணி.
ஈ ) கு.ப. இராஜகோபாலன்
-    ஆண் பெண் உறவை மையமாக வைத்துச் சிறுகதைகள் எழுதியவர்.
-    அக்காலத்தில் பிறர் எழுதத் தயங்கிய விஷயங்களைத் தொட்டு எழுதியவர்.
-    திரை, சிறிது வெளிச்சம், மூன்று உள்ளங்கள் ஆற்றாமை போன்றவை இவரின் புகழ்பெற்ற சிறுகதைகளாகும்.

உ ) மௌனி
-    இக்காலகட்டத்தைச் சேர்ந்த மற்றொரு சிறந்த படைப்பாளர்.
-    இவரின் சிறுகதை முயற்சி வித்தியாசமானது.
-    சாதாரண வாசகர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

-    அழியாச் சுடர்’ ‘மௌனியின் கதைகள் எனும் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். 

Comments

  1. விநோதரச மஞ்சரி எழுதியவர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.

    2.உ.வே.சா அல்ல வ.வே.சு.ஐயர்தான் மங்கையர்க்கரசி யின் காதல் முதலிய சிறுகதைகளை வெளியிட்டவர்.

    சரிபார்த்தல் இல்லாமல் இத்தகைய கட்டுரைகளை வெளியிடத் 'துணிச்சல்' அவசியம். தமிழ் வாழ்க.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்

STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை