சைவ வைணவ பக்தி இலக்கியங்கள்






2. சைவ  வைணவ  பக்தி  இலக்கியங்கள்
முன்னுரை – சங்க காலத்தில் தமிழகம் பல துறைகளிலும் சிறந்து விளங்கியது.
-    காரணம் ; சேர, சோழ , பாண்டியரின் நீதி வழுவா ஆட்சி
-    சமயம் தழைதோங்கியது
-    கி.பி.200-க்குப் பின் களப்பிரர் ஆட்சி
·         பாலி, பிராகிருதம்,வடமொழி முன்னுரிமை
·         சமணமும் பௌத்தமும் போற்றப்பட்டன
·         அரசாட்சியின் கொள்கையால் தமிழும் இந்து மதமும் புறக்கணிக்கப்பட்டன
-    பல்லவர் ஆட்சி வந்தபின் மீண்டும் மாற்றம்
·         தமிழ்மொழியும் இலக்கியமும் புத்துணர்ச்சி பெற்றன
·         பக்தி கால மறுமலர்ச்சி
·         சைவமும் வைணமும் தழைத்தோங்கத் தொடங்கின
சைவ இலக்கியம்
-    சிவபெருமானை முழுமுதற் பொருளாய்ப் போற்றுவது சைவ சமயம்
-    மன்னர்களின் அரவணைப்போடும் அருளாளர்களின் படைப்புகளோடும் சைவ சமயம் மீண்டும் புத்துணர்ச்சி
-    63 நாயன்மார்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றினர்
-    அவர்களுள் 27 அடியவர்கள் இயற்றிய பாடல்கள் சைவத் திருமுறைகள் என வகுக்கப்பட்டன.
-    சிவபெருமானின் பெருமைகளும் அருளும் மக்களின் எடுத்துக்கூறப்பட்டன
-    11-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆட்சி செய்த இராஜ ராஜ சோழனின் ஏற்பாட்டில் நம்பியாண்டார் நம்பி மூலமாக அடியவர்களின் பாடல்கள் 11 திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன
-    பின்னர், நாயன்மார்களின் கதைகள் சேக்கிழார் பெருமானால் திருத்தொண்டர் புராணமாக உருவானது
-    அதுவே 12-ஆம் திருமுறையாகவும் சேர்க்கப்பட்டது.

பன்னிரு திருமுறைகள்
-    சைவ சமயத்தின் நற்பண்பினை உலகிற்கு உணர்த்துவன பன்னிரு திருமுறைகள்
-    இந்நூல்கள் தோத்திரப் பாடல் தொகுப்புகள் என்றும் கூறப்படுவதுண்டு
-    சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் பொதுவாக இதனை தேவாரம் என்கின்றனர்.
-    திருமுறை என்பதற்கு சிவநூல் என்றும், சிவனின் பேரருளைப் பெற வழிகாட்டும் நூல் என்றும் கூறலாம்.

நாயன்மார்கள்
-    சைவ சமயம் தழைத்தோங்க  அரும்பாடுபட்டவர்கள்
-    சிவபெருமானுக்கே தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்
-    சைவ சமயத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் நால்வர்
-    அவர்களைச் சமயக் குரவர்கள் எனச் சிறப்பித்துக் கூறுவதுண்டு
-    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர்







பன்னிரு திருமுறைகளும் அவற்றைப் பாடியவர்களும்

திருமுறை
பெயர்

பாடிய அடியார்
1,2,3
    சம்பந்தர் தேவாரம்

     திருஞான சம்பந்தர்
4,5,6
    அப்பர் தேவாரம்
     திருநாவுக்கரசர்

   7
    சுந்தரர் தேவாரம்
     சுந்தரர்

   8
  திருவாசகம் , திருக்கோவை
     மாணிக்க வாசகர்

   9
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
 திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்த நம்பி, சேதிராயர்.

  10
    திருமந்திரம்
     திருமூலர்

  11
     பதினோறாம் திருமுறை






திருவாலவாயன், காரைகாலம்மையார்,காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடத் தேவர், இளம்பெருமான், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி. (இவரே இந்தப் பதினோறு திருமுறைகளையும் தொகுத்தவர் )


   12
பெரிய புராணம் / திருத்தொண்டர்   புராணம்
     சேக்கிழார்

 நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
-    திருமாலைக் குறித்துப் பாடப்பட்ட பக்திப் பாடல் தொகுப்பு
-    கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை ஆழ்வார்களால் பாடப்பட்டவை
-    10-ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் இப்பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனப் பெயரிட்டார்.
-    இது நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது
-    முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி
ஆழ்வார்கள்
-    திருமாலை முழுமுதற் கடவுளாகப் போற்றுவது வைணவம்
-    திருமாலின் அடியார்களை ஆழ்வார்கள் என அழைப்பர்
-    ஆழ்தல் என்றால் மூழ்குதல் என்று பொருள்
-    உலக இன்பங்களில் ஈடுபாடு கொள்ளாமல் திருமால் பற்றியச் சிந்தனையிலேயே ஆழ்ந்து கிடப்போர் என்று ஆழ்வார்களைக் குறிப்பிடுவர்
-    வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர்
-    இவர்கள் இயற்றிய பாடல்களே நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும்.
(அ) முதலாயிரம்
1. பெரியாழ்வார்           -           திருப்பல்லாண்டு, திருமொழி
2.. ஆண்டாள்             -           திருப்பாவை, நாச்சியார் திருமொழி
3. குலசேகர ஆழ்வார்            -           பெருமாள் திருமொழி
4. திருமழிசை ஆழ்வார்     -           திருச்சந்த விருத்தம்
5. தொண்டரடிப் பொடியாழ்வார்    -     திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
6. திருப்பாணாழ்வார்             -     அமலனாதிபிரான்
7. மதுரகவியாழ்வார்              -     கண்ணிநுண்சிறுதாம்பு

(ஆ) பெரியா திருமொழி

8. திருமங்கையாழ்வார்                  -     பெரிய திருமொழி, குறுந்தாண்டகம்
                                    நெடுந்தாண்டகம்


(இ) இயற்பா

9. பொய்கையாழ்வார்       -     முதல் திருவந்தாதி
10. பூதத்தாழ்வார்          -     இரண்டாம் திருவந்தாதி
11. பேயாழ்வார்           -     மூன்றாம் திருவந்தாதி
12. நம்மாழ்வார்           -     பெரிய திருவந்தாதி

(ஈ) திருவாய்மொழி

12. நம்மாழ்வார்                  -     திருவாய்மொழி






Comments

Post a Comment

Popular posts from this blog

STPM Sem 1. குயில் பாட்டு - மாதிரி வினா விடை